பெற்ற மகன்களை கொலை செய்த தந்தை கைது
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, பெற்ற குழந்தைகளையே கொலை செய்து இடுகாட்டில் புதைத்த கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை உளிமங்கலத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு ஜெகதீஷ் (4), விஷால்(2) என இரு மகன்கள் உள்ளனர்.
முனிராஜுக்கும், அவரது தந்தை முனியப்பாவுக்கும் நிலப் பங்கீடு தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், முனிராஜுக்கும், அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மகனை வீட்டை விட்டு வெளியேறும்படி, முனியப்பா வற்புறுத்தியுள்ளார்.
மனம் உடைந்த முனிராஜ், அருகில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி வந்து, அதில் பூச்சி மருந்து கலந்து தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.
இதில், விஷால் வாயில் நுரை தள்ளி சம்பவ இடத்திலேயே பலியானான். விஷம் அருந்தி உயிருக்கு போராடிய ஜெகதீஷை முனிராஜ் கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இறந்து போன இரு குழந்தைகள் உடல்களையும் அருகே இருந்த மயானத்திற்கு கொண்டு சென்று, குழி தோண்டி புதைத்தார்.
அதை பார்த்த அப் பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த முனிராஜை கைது செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications