தீவிரவாத தாக்குதல்: தாஜ்-டிரைடன்ட் ஹோட்டல்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு!

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் புகுந்த தீவிரவாதிகளின் கையில் சிக்கி தாஜ் கருகிப் போனது. கிட்டத்தட்ட 3 நாட்கள் தாஜ் ஹோட்டலை முற்றுகையிட்டிருந்த தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு, துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்டவற்றால், தாஜ் ஹோட்டலின் பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.
அதேபோல டிரைடண்ட் ஹோட்டலும் பெரும் சேதமடைந்தது.
இந் நிலையில், இந்த இரு ஹோட்டல்களுக்கும் இழப்பீட்டுத் தொகையாக ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 167 கோடியை வழங்கியுள்ளதாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான யோகேஷ் லோஹியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாஜ் மற்றும் ஓபராய் டிரைடன்ட் ஹோட்டல்களுக்கு ரூ. 167 கோடி இழப்பீட்டு நிதியை இதுவரை கொடுத்துள்ளோம். தொடர்ந்து தாஜ் ஹோட்டலின் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
கடந்த 2001ம் ஆண்டுதான் தீவிரவாதத் தாக்குதல்களில் சிக்கி சேதம் ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு இழப்பீடு தரும் புதிய திட்டத்தை உயிர்காப்பீடு அல்லாத பிற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 167 கோடியில் முதல் கட்டமாக தலா ரூ. 25 கோடி நிதியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு ஹோட்டல்களுக்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இந்த இரு ஹோட்டல்களும் ரூ. 500 கோடி இழப்பீடு கோரியுள்ளன.
இறுதி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்குத் இறுதி அறிக்கையை தாஜ், டிரைடன்ட் ஹோட்டல் நிர்வாகங்களிடம் ஜெனரல் இன்சூரன்ஸ் கோரியுள்ளதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications