இங்கிலாந்தில் வரலாறு காணாத மழை-வெள்ளம்
லண்டன்: ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகள் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிப்படைந்துள்ளன.
பிரிட்டனில் சமீப ஆண்டுகளாக மழை கடுமையாக பெய்து, பல நகரங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த கோடைகாலத்தில் பெய்த மழை, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருந்தது. கடந்த 2007ல் ஏற்பட்ட வெள்ளத்தால், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு மற்றும் அலுவலகங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் தொடங்கிய மழையால் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
கம்ரியாவில் உள்ள காக்கர்மவுத், தெர்வன்ட் மற்றும் வொர்க்கிங்டவுன் ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்று வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு தெருக்களில் புகுந்ததால் ஏராளமான மக்கள் தரைதளத்தை விட்டுவிட்டு மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்து தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. வொர்கிங்டன் பகுதியில் ஒரே நாளில் 314 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இங்கிலாந்து வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. நவம்பர் மாதம் முழுக்க பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிட்டது என்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் போலீசார் போராடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications