முல்லைப் பெரியாறு வழக்கு-ஜன. 19க்கு ஒத்திவைத்து அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவசரம் அவசரமாக கேரள அரசு சட்டம் ஒன்றை இயற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி விட்டது.
இதை எதிர்த்தும், இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், திடீரென இதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அரசியல் சாசன பெஞ்ச்சை நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்த பெஞ்ச்சில், நீதிபதிகள் டி.கே.ஜெயின், சுதர்சன் ரெட்டி, முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முல்லை பெரியாறு வழக்கு இன்று இந்த பெஞ்ச் முன்பாக வந்தது. ஆனால், வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்துவைத்து பெஞ்ச் உத்தரவிட்டது.
கேரள அரசுக்கு வாசன் கண்டனம்:
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
பழநியில் நிருபர்களை சந்தித்த அவர், அணை விவகாரத்தில் கேரள அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவது வருத்தத்திற்குரியது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications