சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவில் சிபிஐ ரெய்ட்
சென்னை: சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்குப் பிரிவில் இருந்து பல நாடுகளுக்கும் பொருட்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களும் இங்கு சோதனையிடப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்படுகின்றன.
இந்த சரக்குப் பிரிவில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் நேற்று இரவு 18 சி.பி.ஐ அதிகாரிகள் சரக்குப் பிரிவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இங்கிருந்து அனுப்பப்பட்ட பொருட்களின் ஆவணங்கள், இங்கு வந்த பொருட்களின் ஆவணங்களின் பட்டியல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சரக்குப் பிரிவின் கணக்கு பட்டியலையும் சோதனை செய்தனர்.
மேலும் இங்கு சோதனையில் ஈடுபடும் சுங்க இலாகாவினரின் ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் சில சரக்கு ஏஜெண்டுகளிடமும் விசாரணை நடத்தினர்.
விடியவிடிய நடந்த சோதனை இன்றும் தொடர்ந்தது.
சோதனையின்போது கணக்கில் வராத ரூ.15 லட்சம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 11 பேர் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications