திமுக வேட்பாளர்கள்: திருச்செந்தூர்-அனிதா, வந்தவாசி-கமலக்கண்ணன்
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனும், வந்தவாசியில் கமலக்கண்ணனும் போட்டியிடுவர் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
வந்தவாசியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயராமன் வென்றார். அவர் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்தத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலக்கண்ணன் மறைந்த ஜெயராமனின் மகன் ஆவார்.
நாளை முதல் வேட்பு மனு தாக்கல்:
இந் நிலையில் இரு தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 2ம் தேதி.
மனுக்களை வாபஸ் பெற 5ம் தேதி கடைசி நாள். அன்றை வேட்பாளர்க பட்டியல் வெளியாகும். 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா












Click it and Unblock the Notifications