சென்னையில் மாவீரர் நாள்-நாம் தமிழர் இயக்கம் ஏற்பாடு
சென்னை: சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் நவம்பர் 27ம் தேதி சென்னையில் மாவீரர் தினத்தைக் கடைப்பிடிக்கவுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்கள் இனம் காத்த எங்கள் குல மாவீரர்களின் நினைவை போற்றும் நாள்.
இடம்: கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபம், 80 அடி சாலை, சாலிகிராமம், வடபழனி, (ஆவிச்சி பேருந்து நிறுத்தம்) சென்னை.
நாள்: 27.11.2009 நேரம்: மாலை 5.00 மணி.
நாம் தமிழர் இயக்க சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான் தலைமை வகிப்பார்.
அனைத்து தமிழ் உறவுகளும் தவறாமல் கலந்து கொண்டு நம் இனம் காத்த மாவீரர்கள் நினைவை போற்றுமாறு கேட்டுகொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் சீமான்..
இதற்கிடையே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட கனடா சென்றுள்ளார் சீமான்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர் 26. அவரது பிறந்தநாளை கொண்டாட இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத்தின் அமைப்பாளருமான சீமான் கனடா சென்றுள்ளார்.
டொரன்டோ சென்ற அவரை விமான நிலையத்தில் தமிழர்கள் பலர் திரளாக வந்து வரவேற்றனர்.
பிரபாகரனை வாழ்த்தி போஸ்டர்கள்..
இதற்கிடையே, பிரபாகரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications