கர்நாடகத்தில் ரூ.30,000 கோடியில் லட்சுமி மித்தலின் உருக்கு ஆலை!

ரூ 30 ஆயிரம் கோடி முதலீட்டில் உருவாகும் இந்த ஆலை குறித்து கர்நாடக அரசுடன் முதல்கட்டப் பேச்சுக்களைத் துவங்கியுள்ளனர் அந்நிறுவன அதிகாரிகள்.
இந்த தொழிற்சைலை மட்டும் கர்நாடகத்தில் அமைந்தால், சர்வதேச முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதால், மிகுந்த கவனத்துடன் இந்த திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்செலார் நிறுவனத்தைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதி மற்றும் சலுகைகளும் ஒற்றைச் சாளர முறையில் உடனுக்குடன் கிடைத்தாக வேண்டும் என எதிர்ப்பார்க்கிறது.
இந்த ஆலை குறித்த பிற விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும், சில நடைமுறைகள் முடியும்வரை மேற்கொண்டு எதுவும் கூற முடியாது என்றும் ஆர்செலார் மித்தல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஆண்டுக்கு 6 லட்சம் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இன்னொரு நடுத்தர ஆலை ஒன்றை இதே கர்நாடகத்தில் அமைக்கவும் ஆர்செலார் மித்தல் திட்டமிட்டுள்ளதாம். இந்த பிளாண்ட்டுக்கு ரூ 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாம். இதற்கான அனைத்து பூர்வாங்க வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளதாம்.
ஏற்கெனவே ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் உருக்கு ஆலைகளை ஆர்செலார் மித்தல் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனைகள் தொடர்வதால், கர்நாடக திட்டத்தில் கவனத்துடன் செயல்பட விரும்புகிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications