Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்யம் நிறுவன ஊழல் வழக்கு... சாதகமாக தீர்ப்பு சொல்ல ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கியவர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும் மோசடிக்குள்ளான சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல் வழக்கில், சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்காக ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிறுவனங்கள் சட்ட வாரிய உறுப்பினர் வாசுதேவன், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

அவருடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்திய போது ரூ.55 லட்ச ரொக்கம் சிக்கியது.

மத்திய அரசின் கம்பெனி சட்ட வாரியத்தின் உறுப்பினராக இருப்பவர், வாசுதேவன். கம்பெனி சட்ட வாரியத்தின் சென்னை மண்டல இயக்குனராகவும் உள்ளார். நாடு முழுவதும் உள்ள கம்பெனிகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்த சத்யம் வழக்கை விசாரித்து வந்ததும் இந்த அமைப்புதான்.

கம்பெனி சட்ட வாரியத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் நடக்கும் இந்த வழக்கில், சத்யம் நிறுவனத்துக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிப்பதற்காக ரூ.7 லட்சத்தை லஞ்சமாக தருமாறு வாசுதேவன் கேட்டார்.

இதற்கிடையே, வாசுதேவன் நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ.க்கு ஏற்கனவே புகார்கள் வந்ததால், அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். சத்யம் நிறுவனத்தினரிடம் ரூ 7 லட்சம் லஞ்சம் கேட்ட விஷயம் சிபிஐ கவனத்துக்கும் வந்தது.

எனவே வாசுதேவனை தீவிரமாகக் கண்காணித்தது. அவரது டெல்லி வீட்டுக்கு வருவோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இது தெரியாமல், சத்யம் நிறுவனத்தின் கம்பெனி செயலாளர் மனோஜ் பாந்தியா, டெல்லியில் உள்ள வாசுதேவனை அவருடைய அரசு பங்களாவில் நேற்று நேரில் சந்தித்து, லஞ்சப் பணம் ரூ.7 லட்சத்தை வழங்கினார். அப்போது, அவர்கள் இருவரையும் வீட்டுக்கு வெளியே பதுங்கியிருந்த சிபிஐ அதிகாரிகள் பிடித்தனர்.

லஞ்சம் வாங்கிய வாசுதேவன், அவருக்கு லஞ்சம் கொடுத்த 'சத்யம்' நிறுவன செயலாளர் மனோஜ் இருவரையும் சி.பி.ஐ. கைது செய்தது. அதன் பிறகு, வாசுதேவனின் அலுவலகம் மற்றும் லஞ்சம் அளிக்க முன்வந்த 'சத்யம்' நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் வாசுதேவனுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடு என 7 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் காட்டப்படாத ரூ.55 லட்ச ரொக்கம் சிக்கியது. அவருடைய வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்களும் கிடைத்தன.

இதுபோல, லஞ்சம் கொடுக்க வந்த 'சத்யம்' நிறுவன செயலாளரிடம் இருந்தும் ரூ.3 லட்சம் ரொக்கமும், சில ஆவணங்களும் சிக்கின. இது தொடர்பாக வாசுதேவன், 'சத்யம்' நிறுவன செயலாளர் மனோஜ், பாந்தியா மற்றும் வக்கீல் ஆங்குர் சாவ்லா ஆகிய மூவரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூவர் மீதும் விசாரணை தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+