டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்திற்கு பஞ்சம்-பலர் ஏமாற்றம்
மதுரை: மதுரை தலைமை தபால் நிலையங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு விண்ணப்பங்கள் தினமும் குறைவாக வழங்கப்படுவதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அடுத்தாண்டு ஏப்ரலில் குரூப் 2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்துகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் வழங்கப்படுகின்றன. ரூ.30 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
மதுரையில் வடக்கு வெளி வீதி, தல்லாகுளம், அரசரடி தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தினமும் 9.30 மணி முதல் குறைந்த அளவு விண்ணப்பங்களே விற்பனை செய்யப்படுவதால் காலை 7 மணிக்கே நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் வாங்குகின்றனர்.
சிறிது நேரத்தில் விண்ணப்பங்கள் காலியாகி விடுகிறது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
'இதுபற்றி தபால் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டால், டி.என்.பி.எஸ்.சி அனுப்பும் விண்ணப்பங்கள் குறைந்த அளவிலேயே இருப்பதாக கூறுகிறார்கள்.
விண்ணப்பங்களை தபால் அலுவலகத்தின் மூலம் வினியோகிப்பதற்கு பதிலாக டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்திருக்கலாம்' என்று பொதுமக்கள் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications