தமிழகத்தில் மணல் கொள்ளையே நடக்கவில்லையாம்!
சென்னை: தமிழகத்தில் மணல் திருட்டு நடக்கவில்லை என்று ராஜ்யசபாவில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிருத்விராஜ் செளகான் தெரிவித்தார்.
தமிழக ஆறுகளில் மணல் திருட்டு காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது தொடர்பாக ராஜ்யசபாவில் அ.தி.மு.க எம்.பி மலைச்சாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் பிருத்விராஜ் பதில்ளிக்கையில், தமிழக ஆறுகளில் முறைகேடான மணல் அள்ளும் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. தனியார் மணல் குவாரிகளின் திருட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2003ல் இருந்து தமிழக அரசின் பொதுப் பணித்துறை மூலமே கட்டுமானப் பணிகளுக்கு மணல் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுப் பணித்துறை மூலம் மணல் குவாரிகளின் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இயற்கை வளம் மற்றும் பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்களின் முறையான அனுமதியுடன் தான் ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீர் பாதிக்காமல், ஆறுகளில் 1 மீட்டருக்கு குறைவான ஆழத்தில் தான் மணல் அள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைக்கு எவ்விதப் பாதிப்பு இல்லாமல் மணல் அள்ளப்பட்டு வருகின்றது என்றார்.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications