அலட்சியமாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார் கசாப் வக்கீல்
மும்பை: அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலம் குறித்து அலட்சியமாக பேசியதற்காக கசாப்பின் வக்கீல் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவரது வக்கீல் பதவி தப்பியுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் குறித்து குறுக்கு விசாரணை செய்கிறீர்களா என்று நீதிபதி தஹிளியானி, கசாப்பின் வக்கீல் அப்பாஸ் கஸ்மியிடம் கேட்டார்.
அதற்கு அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை. முதலில் தாக்கல் செய்யட்டும். பிறகு பார்க்கலாம் என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி, இப்படி தவறான நடத்தைக்காகவும், அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவும் உங்களை வக்கீல் பணியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு அப்பாஸுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நேற்று தெரிவித்தார் அப்பாஸ் கஸ்மி. இதுகுறித்து நீதிபதியிடம் கஸ்மி கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வழக்கு. குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக நான் வாதாடி வருகிறேன். நேற்று நடந்தது, ஏதோ கோபத்தில் நடந்து விட்டது. இதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து தனது நோட்டீஸ் உத்தரவை திரும்பப் பெறுவதாக கூறிய நீதிபதி, கஸ்மியை பொய்யர் என்று கூறியதையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications