இன்று பக்ரீத் - முஸ்லீம்கள் கொண்டாட்டம் - பிரதீபா, பிரதமர், கருணாநிதி வாழ்த்து
சென்னை: நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தியாகத் திருநாளாக கொண்டாடப்படும் இந்த நாளையொட்டி இன்று காலையில் நாடு முழுவதும் பள்ளிவாசல்கள், மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் காலையில் பள்ளிவாசல்களில் முஸ்லீம் சமுதாயத்தினர் தொழுகைகளில் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிரதீபா பாட்டீல், பிரதமர், கருணாநிதி வாழ்த்து...
பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லீம் மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் இன்று நாடெங்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
ஈத்-உல்-அஸா என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள், கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது' என்பதை உணர்த்தும் நன்னாளாகும்.
மிலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கியது; உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள் வழங்கியது; உதவித்தொகை பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000 என்பதில் இருந்து 2400 ஆக உயர்த்தியது; உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது; அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அதிக அளவில் முஸ்லிம்கள் பயனடைய வழிவகுத்துள்ளது முதலான பல்வேறு சலுகைகளை வழங்கி இஸ்லாமிய சமுதாய மக்களிடம் அன்பு செலுத்திவரும் இந்த அரசின் சார்பில் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications