இங்கிலாந்து விமான நிலையங்களில் நாளை முதல் கைரேகை சோதனை கட்டாயம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்களில் நாளை முதல் கைரேகை சோதனை கட்டாயமாக்கப்படுகிறது.
அதன்படி நாளை முதல் இங்கிலாந்துக்கு வரும், பயோமெட்ரிக் விசா வைத்துள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்களது கைரேகைகளை விமான நிலையங்களில் உள்ள கைரேகை பதிவு மையங்களில் நாளை முதல் தங்களது கைரேகைகளை சோதனைக்குட்படுத்த வேண்டும்.
வழக்கமான சோதனைகள் தவிர்த்து கூடுதலாக கைரேகை சோதனைக்கும் இந்த பயணிகள் நாளை முதல் இங்கிலாந்து விமான நிலையங்களில் உட்படுத்தப்படுவர்.
விசா விண்ணப்பம் கோரி கொடுத்த மனுவுடன் இணைக்கப்பட்டிருந்த கைரேகையுடன், பயணிகளின் கைரேகை ஒத்து பார்க்கப்படும். அதன் பின்னரே பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர்.












Click it and Unblock the Notifications