காங்கோ படகு விபத்தில் 90 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

காங்கோவில் உள்ள மாய் டோம்பே என்ற ஏரியில் வந்தபோது இந்தப் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்தப் படகில் 300 பேர் வரை இருந்தனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
முதலில் 70 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. ஆதரவு ரேடியோ தெரிவித்துள்ளது.
இந்த படகு சரக்கு ஏற்றிச் செல்லக் கூடியது. ஆனால் முறைகேடாக பயணிகளை அதிலும் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து உடல்களையும் படகுக்குள் சிக்கித் தவிப்பவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.
காங்கோ நாட்டு மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பெரும்பாலும் படகு பயணத்தையே மேற்கொள்கிறார்கள். அங்கு சாலை வசதி 300 மைல் மட்டுமே உள்ளது. இதனால் படகு போக்குவரத்து மிக முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications