தாலி கட்டிய சிறிது நேரத்தில் மாப்பிள்ளை பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நாங்குநேரி அருகே தாலி கட்டிய சிறிது நேரத்தில் மணமகன் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள துலுக்கர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் சிங்கபூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக அரவிந்த் சிங்கபூரில் இருந்து ஊருக்கு வந்தார். வந்த இடத்தில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனினும் ராதாபுரம் அருகேயுள்ள சீலாத்திகுளத்தை சேர்ந்த ஓரு பெண்ணுக்கும், அரவிந்துக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டது.

இவர்களுக்கு கடந்த 27ம் தேதி திருமணம் நடந்தது. திருமண நாள் அன்று காலையிலேயே அரவிந்துக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று பின்னர் மணமேடைக்கு வந்து பெண்ணுக்கு தாலி கட்டினார்.

சிறிது நேரத்திலேயே அரவிந்தின் உடல் நிலை மேலும் பாதித்தது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அரவிந்த் பரிதாபமாக இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+