இலங்கை தேர்தலுக்கு சர்வதேச பார்வையாளர்கள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் வரவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகே கூறுகையில், இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் உறுதியுடன் உள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த், ஐ.நா. அமைப்புகளின் பார்வையாளர்கள் வரவுள்ளனர்.
முறையான அடையாள அட்டை இல்லாத கிட்டத்தட்ட 12 சதவீத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றார் திசநாயகே.












Click it and Unblock the Notifications