மே 16க்குள் நடக்கும் பிளஸ்1 மாணவர் சேர்க்கை செல்லாது!
சென்னை: மெட்ரிக் பள்ளிகளில் மே 16ம் தேதி்க்கு முன்னதாக 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. மீறி நடத்தப்படும் மாணவர் சேர்க்கை செல்லாது என்று மெட்ரிககுலேஷன் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே மற்றும் ஜூன் மாதத்துக்கு இடையே நடைபெறுவது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால், ஏராளமான பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே தொடங்கிவிடுகின்றன. இதன் மூலம் அதிக அளவில் பணமும் வசூலிக்கப்படுகிறது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனக்கூறி முதல் கட்டத்திலும், சேர்க்கை எல்லாம் முடிந்துவிட்டது என மற்றொரு கட்டத்திலும் கூறி, மறைமுக பேரத்தின் மூலம் பள்ளிகள் பணம் வசூல் செய்துவருகின்றன. இந்நிலையில், பிளஸ்1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மட்டும் மெட்ரிகுலேஷன் இயக்குனர் கெடு விதித்து எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில், பல பள்ளிகளில் மாணவர்களின் 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்ணை வைத்து, மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே பிளஸ்1 மாணவர் சேர்க்கையை முடித்துவிடுவதாக புகார்கள் வருகின்றன.
பிளஸ்1 மாணவர் சேர்க்கையை 10ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி 15 நாட்களுக்குள் தான் முடிக்க வேண்டும். மே 16ம் தேதிக்கு முன்னர் நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட வேண்டும். தவிர, மாணவர் சேர்க்கை தொடர்பாக மாணவர், பெற்றோரிடம் நேர்காணல் எதையும் நடத்தக் கூடாது.
10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களையும் 11ம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 871 உயர்நிலைப்பள்ளிகள்:
தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 871 புதிய உயர்நிலைப் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த புதிய பள்ளிகள் துவக்க மொத்த தொகையான ரூ.652 கோடியில், ரூ.489 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பள்ளிகள் என்பது கல்வியறிவு விகிதப்படி கணக்கிட்டு விரைவில் அறிவிக்கப்படும். புதிய பள்ளிகளுக்காக சுமார் 1.27 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே உள்ள 20 ஆயிரம் பள்ளிகளில் நூலகம் மற்றும் ஆய்வுக் கூடங்கள் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications