சமர்சீர் கல்வித் திட்டத்தில் 'நாத்திகப் புலம்பல்': ராம.கோபாலன்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமச்சீர் கல்வியில் முதல்வர் ஆர்வம் காட்டும்போதே சந்தேகம் எழுந்தது. எல்லோருக்கும் ஒரே கல்வி என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கவே இந்த 'தகிடுதத்தம்' என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இதை வரைவுத் திட்ட அளவிலேயே இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது.
மக்களால் புறந்தள்ளப்பட்ட ஈ.வெ.ராவின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க முதல்வர் முயல்கிறார். மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு தோற்றுப் போன 'நாத்திகப் புலம்பலை'க் கல்வி என்ற பெயரில் மாணவர்களிடம் திணிக்க சதி செய்கின்றனர் திமுகவும் அதன் தலைவரும்.
சமச்சீர் கல்வி என்பது கல்வித் திட்டத்திலும் இருக்கும் நல்ல கருத்துக்களை ஒருங்கிணைப்பது என்ற பசப்பு வார்த்தையைக் கூறிய கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வரைவுத் திட்டத்திலேயே இந்து மதத்தைக் கேவலப்படுத்தும் அவலத்தை வெளியிட்டுள்ளார்.
மூன்றாம் வகுப்பு பாடத்தில் ஈ.வெ.ராவின் தாக்கம், நான்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், ஐந்தில் மூட நம்பிக்கை, ஆறில் கட்டுக்கதை, எழில் அன்னை தெரசா சேவை, சமூக அறிவியலில் இஸ்லாமியர் வருகை, எட்டில் விழாக்கள் அவசியமா?.
ஒன்பதில் ஆற்றுச் சமவெளி நாகரிகம் இதில் கிறிஸ்தவமும், ஜுடோயிசமும் வருகிறது. அலகு 2 இடைக்காலம் நிலமானிய முறை திருச்சபையின் பங்கு, இஸ்லாமியர் நன்கொடை, பத்தாம் வகுப்பில் ஈ.வெ.ராவின் விழிப்புணர்வு சிந்தனை.
என்னவிதமான சமச்சீர் கல்வி இது?. மக்களை மடையர்களாய் நினைத்து விட்டார்கள் ஆட்சியாளர்கள்.
எந்தத் தைரியத்தில் இப்படி ஒரு வரைவுத் திட்டத்தை வைத்தார்கள். அரசின் பிடியில் கல்வித்துறை சிக்கி சின்னாபின்னமாகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
இந்த வரைவுத் திட்டத்தை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். முதல்வரின் துதிபாடிகளால் உருவாக்கப்பட்ட 'குப்பை வரைவுத் திட்டத்தை'க் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட உண்மையான கல்வியாளர்களைக் கொண்டு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தினை முறைப்படுத்த வேண்டும்.
பாடத்தின் முழுமையான வடிவை மக்கள் முன்வைத்து ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications