இரண்டாவது காலாண்டில் அசத்தலான பொருளாதார வளர்ச்சி!

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் (ஜி.டி.பி.) 7.7 சதவீதமாக இருந்தது.
ஆனால் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.2 ஆக இருந்தது. எனவே இந்த ஆண்டு 6.4 சதவிகிதம் அளவுக்குதான் வளர்ச்சி இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் கூறியிருந்தனர். ஆனால் அந்தக் கணிப்பைப் பொய்யாக்கும் விதத்தில் அபாரமான வளர்ச்சியை இந்த காலாண்டில் பெற்றுள்ளது இந்திய பொருளாதாரம்.
இந்த பருவத்திற்கான (ஜி.டி.பி.) சதவீதம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த புள்ளி விவரப்படி, சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்த வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் இந்தப் பருவத்தில் பெற்றுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அரசு அறிவித்துள்ள பல்வேறு நிதிச் சலுகைகள்தான்.
இந்தக் காலாண்டின் வளர்ச்சி அமோகமாக இருந்தாலும் ஒட்டுமொத்த ஆண்டுக்கும் பார்க்கும்போது, 7 சதவிகித அளவைத் தாண்டுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது என்றார், இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுப் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
"ஆனால் இது அபாரமான வளர்ச்சிதான். ஆனாலும் இப்போது நம் முன் உள்ள பல சவால்களை நாம் முறியடிக்க வேண்டியுள்ளது. விவசாயத்துறையில் குறைந்தளவு உற்பத்திதான் இன்னும் நமக்கு கிடைத்துக் கொண்டுள்ளது.
சொல்லப் போனால் விவசாய உற்பத்தி இது வரை இல்லாத குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது. இதிலிருந்து விவசாயம் மேம்பட வேண்டும். விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் வந்தாலே கணிசமான வளர்ச்சியைக் காணமுடியும்", என்கிறார் பிரபல பொருளியல் நிபுணர் சோனல் வர்மா.
இந்த ஆண்டு பருவமழை வேறு வழக்கத்தை விட 23 சதவிகிதம் குறைவு என்பதால், விவசாயத்துறையில் உற்பத்தியை அதிகரிப்பது கடினம்தான்.
அரசு வைத்திருக்கும் மாற்றுத் திட்டம் என்ன என்பது அறிவிக்கப்பட்டால்தான் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி கணிக்க முடியும் என்கிறார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications