செல்போன் அடையாள எண் பெற முண்டியடிக்கும் கூட்டம்!

நம்நாட்டில் அரசின் அனுமதி பெற்று விற்கப்படும் செல்போன்கள் அனைத்திலும் ஐ.எம்.இ.ஐ. என்று சொல்லக்கூடிய அடையாள குறியீட்டு எண் கள் உள்ளன. இந்த எண்கள் உள்ள போன்கள் திருட்டு போனாலோ அல்லது இந்த மொபைல்களிலிருந்து வரும் அழைப்புகள் குறித்தோ எளிதில் கண்டு பிடித்து விட முடியும்.
தீவிரவாதிகள் இதை சட்ட விரோத காரியங்களுக்கு பயன்படுத்தும்போது எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால் அரசு அனுமதி பெறாத, சீனா, கொரியா செல்போன்களில் இதுபோன்ற அடையாள எண்கள் இல்லை. சமீப காலமாக ஐ.எம்.இ.ஐ. எண்களுடன் சீனா மொபைல்கள் சில வந்துள்ளன. ஆனால் அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை போலி என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் செயல் இழக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி ஒரு பகுதி செல்போன்கள் செயலிழக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் ஐ.எம்.இ.ஐ. அடையாள குறியீட்டு எண் வழங்கும் செல்போன் கடைகளை முற்றுகையிட்டனர். கடந்த 2 நாட்களாக அக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு ரூ.199 கட்டணம் செலுத்தி ஐ.எம்.இ.ஐ. எண்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் வந்து தான் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். இந்த அடையாள எண்களை டெல்லியில் இருந்து செல்போன் டீலர்கள் பெறுகிறார்களாம்.
வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை காட்டி ரூ.199 கட்டணம் செலுத்தி ஐ.எம்.இ.ஐ. எண் பெற்றுக் கொள்ளலாம்.
சீனா, கொரியன் செட் வைத்திருப்பவர்கள் 57886 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதில் நாட் வேலிட் என்ற பதில் வந்தால், உடனே 199 செலுத்தி அடையாள எண் பெறலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications