திமுகவை ஆதரிப்பது ஏன்?- சரத் விளக்கம்
சென்னை: இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது எனது முடிவு அல்ல. கட்சியின் விருப்பம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தல் தனக்கு திருப்பத்தைக் கொடுக்கும் எனக் கூறி வேட்பாளரை நிறுத்தி படுதோல்வி அடைந்த சரத்குமார், தற்போது, திருச்செந்தூர்-வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்போம் என அறிவி்த்துள்ளார்.
அவர் கூறுகையில், திருமங்கலம் இடைத்தேர்தலில் நான் எடுத்த முடிவு வேறு, கட்சியில் பெரும்பாலானவர்கள் எடுத்த முடிவு வேறு. நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் விருப்பம் வேறு, எனது முடிவு வேறு.
அடுத்த ஆண்டுகூட பொதுத் தேர்தல் வரலாம். எனவே, இந்த இடைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று கட்சியில் உள்ள பெரும்பாலானோர் கேட்டுக் கொண்டனர்.
அதனால், கட்சியின் நிர்வாகக் குழு, உயர்மட்டக் குழு எடுக்கும் முடிவின்படி நடப்பது என்று நான் முடிவு செய்தேன். பெரும்பாலானவர்களின் முடிவுப்படி, இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தோம்.
தமிழக அரசின் ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் டிவி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவை மக்களை நன்றாக சென்றடைந்துள்ளதால், நான் பிரசாரத்திற்கு சென்று தான் திமுக வெற்றி பெறும் நிலை இல்லை என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications