ரூ 16க்கு அரிசி வாங்கி ஒரு ரூபாய்க்கு விற்கும் தமிழகம்!
சென்னை: மத்திய அரசிடம் ரூ 16-க்கு அரிசியை வாங்கி ஒரு ரூபாய்க்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குகிறது தமிழக அரசு. இதனால் அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது.
அரசியலுக்காக செய்யப்பட்டும் இந்த செலவால், மாநிலத்தில் பிற திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்துக்கு அரிசிக்கு தேவை அதிகமாகவும், சப்ளை குறைவாகவும் உள்ள நிலையில், மத்திய அரசிடம் வெளிச்சந்தை விலைக்கே அரசியைக் கேட்கிறது தமிழக அரசு.
இதன்படி ஒரு கிலோ ரூ.16 என்ற விலைக்கு மத்திய அரசிடம் அரிசியைப் பெறுகிறது தமிழகம்.
ஏற்கெனவே இதுகுறித்த கோரிக்கையை மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தது தமிழகம். அதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழகம் கோரிய கூடுதல் அரிசியை தர ஒப்புக் கொண்டதாகவும், அதற்கான பதிலை தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை, எனவும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் மக்களவையில் செவ்வாய்க்ழமை கூறியது நினைவிருக்கலாம். எனவே தனது சம்மதக் கடிதத்தை இப்போது தமிழக அரசு அளிக்க உள்ளது.
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் ஒருமாத தேவையின் அளவு 2.55 லட்சம் டன்கள். ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் அரிசியின் அளவு 2.3 லட்சம் டன்தான். எனவே இது தேவையின் அளவை விட 25 ஆயிரம் மெட்ரிக் டன் குறைவாகும்.
மத்திய அரசு வழங்கும் 2.3 லட்சம் டன்னில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு என கிலோ ரூ.5.65ல், 1.04 லட்சம் டன் அரிசியும்,
வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு கிலோ ரூ.8.30 என்ற அளவில் 1.26 லட்ம் டன் அரிசியையும் மத்திய அரசு தருகிறது.
இந்த அரிசியைகத்தான் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் வழங்கி வருகிறது. கூடுதல் அரிசித் தேவை இருந்தால், அதை வெளிச் சந்தை விலைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து தனக்கு தேவையான 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ 16 என வாங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளது. உண்மையில் இதை கிலோவுக்கு ரூ.18 என்ற அளவில் மத்திய அரசு விற்கச் சொல்கிறது.
ஆனால் கிலோவுக்கு ரூ 15 நஷ்டத்துக்கு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசியை தமிழக அரசு தருவதால், கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது.
இந்த அளவு விலைக்கு வேறு எந்த மாநிலமும் மத்திய அரசிடம் அரிசி வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications