அங்கீகாரம் இல்லாத மேலும் 10 பள்ளிகளை மூட உத்தரவு
நாகப்பட்டனம்: நாகை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த மேலும் 10 பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் கரியாப்பட்டனத்தில் உள்ள தேவி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவ மாணவியர் 9 பேரும், ஆசிரியை சுகந்தியும் வேன் விபத்தில் கொடுமையாக உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட தேவி பள்ளி அங்கீகாரம் முடிந்த பின்னரும் அதைப் புதுப்பிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது தெரிய வந்து அந்தப் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மேலும் 10 பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் முனியநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில், 10 பள்ளிகள் அங்கீகாரம் முடிவடைந்தும் தொடர்ந்து செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இந்தப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளில் தற்போது படித்து வரும் மாணவ, மாணவியரை அருகாமையில் உள்ள வேறு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் சேர்க்க உதவி கல்வி அதிகாரிகள் உதவுவார்கள் என்றார்.
மூடப்பட்ட பள்ளிகள் விவரம்..
நாகை - ஏஜேசி பப்ளிக் பள்ளி மற்றும் வித்யாரம்பம் நர்சரி தொடக்கப் பள்ளி.
சேமநாதனிருப்பு - சரஸ்வதி வித்யாலயா நர்சரி தொடக்கப் பள்ளி.
செம்பனார்கோவில் - மணியம்மை நர்சரிப் பள்ளி.
திருமுல்லைவாசல் - வெற்றி நர்சரி தொடக்கப் பள்ளி.
கீழையூர் - மாஸ் நர்சரி தொடக்கப் பள்ளி.
புஷ்பவனம் - வேலுமணி நர்சரி தொடக்கப் பள்ளி.
எருக்கூர் - மெளன்ட் கார்மல் நர்சரி தொடக்கப் பள்ளி.
நாகூர் - அல் இஷாத் நர்சரி தொடக்கப் பள்ளி.
கொருக்கை - ஆக்ஸ்போர்ட் நர்சரி தொடக்கப் பள்ளி.
--
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications