ரஜினி மகள் மீது வழக்குப் போட்ட தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் - கார் உடைப்பு
சென்னை: ரஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள கோவா படத்தை திரையிட இடைக்காலத் தடை வாங்கியுள்ள தொழிலதிபர் வருண் என்பவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
செளந்தர்யா ரஜினிகாந்த் கோவா என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு வருண் என்ற இளம் தொழிலதிபர் ரூ. 1 கோடி கடன் கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வருண் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், கோவா படத் தயாரிப்புக்காக தன்னிடம் லதா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வாங்கிய ரூ 1 கோடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கொடுத்த பின்னரே கோவா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த கோர்ட், படத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து வருணுக்கு கொலை மிரட்டல்கள் வருகிறதாம். வருணின் வீடு தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ளது.
நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் வருணின் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்கள் வந்த காரால் வருணின் கார் மீது மோதினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இது குறித்து வருண் தேனாம்பேட்டை போலீசில் இரவு 1 மணிக்கு புகார் செய்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications