'டிவி' நிருபராக நடித்த திருட்டு பேர்வழி கைது
சென்னை: 'டிவி' நிருபர் எனக் கூறி திருட்டுத் தொழில் நடத்திவந்த மோசடிப் பேர்வழியை சென்னை ரயி்ல்வே போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் ரவி. வயது 47. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் வீடியோ நிறுவனத்தில் ஃபிரிலேன்சராக வேலை செய்து வந்தார்.
அப்போது, தன்னை தனியார் தொலைக்காட்சி நிருபர் என வெளியே கூறிக்கொண்டு பல இடங்களில் வீடியோ மற்றும் புகைப்பட கேமராக்களை வாடகைக்கு எடுத்து ஏமாற்றியுள்ளார். நாகேஷ், நாகராஜ் என்ற பெயர்களில் இவர் மோசடி செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி ரயில் நிலையங்களுக்குளளும் பயணிகளின் விலையுயர்ந்த பொருட்களை திருடி வந்தார்.
ரயில் நிலையங்களி்ல் திருட்டுப் புகார்கள் அதிகரித்ததால், சென்னை சென்ட்ரலில் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற இந்த மோசடிப் பேர்வழியை போலீசார் சந்தேகத்தின் பேரி்ல் பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்குபின் முரணான தகவல்கள் தந்ததால் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது மேற்கண்ட உண்மைகள் அனைத்தையும் கக்கிவிட்டான்.
மோசடிப் பேர்வழி ரவியை கைது செய்த ரயில்வே போலீசார், அவனிடம் இருந்த ரூ. 60 லட்சம் மதிப்புள்ள திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications