தமிழக-கேரள போக்குவரத்தை தடுப்போம்: வைகோ எச்சரிக்கை

பொள்ளாச்சியில் ம.தி.மு.க விவசாய அணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
நதிநீர் இணைப்பு விஷயத்தில், குழப்பமான செய்திகள் தான் வெளிவந்த வண்ணம் உள்ளது. கங்கை, காவிரியை இணைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சராக இருந்த ராவ் வலியுறுத்தியுள்ளார். அந்த திட்டத்திற்கு, ஏராளமான பொருள் செலவாகும் என்பதால், பரிசீலனையில் மட்டுமே இருந்தது.
அதனால், தென்னக நதிகளை இணைக்க ம.தி.மு.க சார்பில் தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நான் கொண்டு வந்தேன். கடந்த 2004ம் ஆண்டில் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்தை சேர்க்க போராடினேன். அப்போது, கருணாநிதிக்கு நதிகள் இருப்பது கூட தெரியாது. அந்த திட்டமும் கூட தெரியாது.
முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில், அதன் பின்விளைவை உணராமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. முல்லைப் பெரியார் அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில், புதிய அணைக்கான அலுவலகம் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை வனப்பகுதியில் குவித்துள்ளது.
அணை கட்டுவதற்காக வெடி வைத்து பாறைகளை உடைக்கும் போது, ஏற்படும் அதிர்வால், முல்லை பெரியார் அணைக்கு ஆபத்து ஏற்படும். அதையே காரணமாக கூறி, முல்லைப் பெரியார் அணையை கேரள அரசே உடைத்து விடும்.
முல்லைப் பெரியார் அணையை பாதுகாக்கும் நோக்கத்திலும், தமிழக அரசின் செயல்பாடற்ற நிலையை உணர்த்தும் வகையிலும், வரும் 29ம் தேதி தமிழகத்தில் இருந்து கம்பம் வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் மறிக்கும் போராட்டம் நடைபெறும்.
இதற்கு, கேரளா அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் வாகனங்களை மறித்து பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்போம்' என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications