நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை
சென்னை: சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இவற்றில் பல்வேறு பதவிகளில் உள்ள உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு நடத்த சிபிஐ முடிவு செய்தது. இதன்படி, நேற்று தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சிலரின் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி ரெய்டுகளை நடத்தியது.
சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை சி.பி.ஐ தற்போது வெளியிடவில்லை. ரகசியமாகவே வைத்திருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகையில், 'சோதனைகள் இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகு தான் எல்லாம் தெளிவாகும்.
மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் சிறப்பு சோதனைகளை நடத்த சி.பி.ஐ ஊழல் தடுப்புப் பிரிவு முடிவு செய்தது. இதன்படி எல்லா துறைகளிலும் தேவையான அளவுக்கு விசாரணை மற்றும் சோதனைகளை ஒவ்வொன்றாக நடத்த உள்ளோம். தனித்தனியாக கவனம் செலுத்தினால் தான் பெருமளவிலான முறைகேடுகளை அம்பலப்படுத்த முடியும்.
தற்போது நெடுஞ்சாலைத் துறையில் இது நடந்து கொண்டிருக்கிறது' என்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால் பல அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications