மும்பை தாக்குதலில் தொடர்பில்லை - குற்றச்சாட்டை மறுக்கும் ஹெட்லி
சிகாகோ: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமெரிக்க கோர்ட்டில் டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டங்கள் தீட்டியது தொடர்பாக அமெரிக்காவில் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டார் ஹெட்லி. அவருடன் தஹவூர் ஹூசேன் ராணாவும் கைது செய்யப்பட்டார்.
தற்போது ஹெட்லி மீது மும்பைத் தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டியுள்ளது எப்.பி.ஐ. இதுதொடர்பாக சிகாகோ கோர்ட்டில் ஹெட்லி மீது மொத்தம் 12 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக சிகாகோ நீதிமன்றத்தில் ஹெட்லி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்ற சம்பிரதாயப்படி குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அப்போது ஹெட்லி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இருதரப்பு கருத்துக்களை கேட்டபின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹெட்லி தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் ஜான் தீஸ் நிருபர்களிடம் கூறுகையில், 'ஹெட்லி தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அடுத்து வரும் வாரங்களில் எங்கள் தரப்பு நியாயத்துக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்போம்' என்றார்.
மும்பை சதி திட்டம் தொடர்பாக ஹெட்லியை இந்திய அதிகாரிகள் அணுகமுடியுமா என்று கேட்டபோது, 'அவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால், அப்போது அதுபற்றி யோசிப்போம்' என்றார் தீஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications