திமுகவுக்கு ஆதரவாக பாமகவினர் தீவிரப் பிரசாரம்!!
சென்னை: வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாமக முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவித்தது. மேலும், இந்த்த தேர்தலில் யாருக்கும் எங்களது ஆதரவு இல்லை, பாமகவினர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கும் 49 ஓ விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் பாமக தலைமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வந்தவாசி தொகுதியில், பாமகவைச் சேர்ந்த பேராசிரியர் பொன்னுச்சாமி, பெரணமுல்லூர் எம்எல்ஏ எதிரொலி மணியன் ஆகியோர் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முக்கியக் காரணம், நேற்று பாமக தலைமை பாமகவினரிடம் ஒரு வெளிப்படையான உத்தரவு போட்டுள்ளது. அதாவது, 49 ஓ விதியை பயன்படுத்த வேண்டாம். தேர்தலில் வாக்களியுங்கள், அதேசமயம், தேமுதிகவுக்கோ, அதிமுகவுக்கோ ஓட்டு போடக் கூடாத. மற்றப்படி யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்று வந்தவாசி தொகுதி பாமகவினருக்கு உத்தரவு போயுள்ளதாம்.
இதையடுத்து பாமகவினர் திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பதாக தெரிகிறது.
வந்தவாசி தொகுதி தனித் தொகுதி என்பதால் தலித் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர் பொன்னுச்சாமி களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வன்னியர்கள் அதிகம் உள்ள வந்தவாசி தொகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்று 21 ஆயிரம் ஓட்டுகளை பாமக வாக்கியது. அதேபோல் அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலிலும் பாமக தனித்து நின்று 25 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றது.
இத்தொகுதியில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர் வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் திமுகவோ, அதிமுகவோ, பாமகவின் வாக்கு வங்கி குறித்து கவலைப்படவும் இல்லை, ஆதரவு கேட்கவும் இல்லை. இதையடுத்துதான் பாமகவினர் ஓ போட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் தற்போது திடீரென திமுகவுக்கு ஆதரவான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications