திருச்செந்தூர் ஜெ. பிரசாரத்தின்போது கல் வீசப்படலாம் - போலீஸ் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து ஜெயலலிதா வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
ஆனால் தற்போது திருச்செந்தூரில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா பிரசாரத்திற்காக செல்லும்போது அவரது வேன் மீது கல்வீச்சு நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீஸார் அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனராம்.
திமுக, அதிமுகவினர் மோதல் தொடர்ச்சியாக ஜெயலலிதா பிரசாரத்தின் போது சில இடங்களில் அவர் வேன் மீது கல்வீச்சு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அவரது பிரசாரத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென அந்தச அறிக்கையில் உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications