தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு நரேஷ் குப்தா செல்ல தயங்குவது ஏன்? - சமூக ஆர்வலர்கள் கேள்வி

தமிழகத்தில் வரும் டிசம்பர் 19 ம் தேதி திருச்செந்தூர் , வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், மற்றும் அன்பளிப்பு பொருட்கள் கொடுப்பதாக அதிமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, மதிமுக , காங்கிரஸ, விடுதலை சிறுத்தைகள், உள்ள முக்கிய கட்சியை சேர்ந்த பல ஆயிரம் நிர்வாகிகளும், தொண்டர்களும் திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய இரு தொகுதிகளில் குவிந்துள்ளனர். இனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும், தேர்தல் முறைகேடு நடக்கவும் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தேர்தலை சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய பொறுப்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு உண்டு. ஆனால் அவர் இதுவரை அந்த தொகுதிகளில் ஒரு நாள் கூட நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. எனவே அவர் தனது கடமையை தொகுதிகளுக்கு நேரில் சென்று ஆற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்றனர்.
கடந்த திருமங்கலம் இடைத் தேர்தல் பீகாரை விட மோசமாக இருந்தது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குறிப்பிட்டதக்கது.
இந்த நிலையில் இப்போதாவது தொகுதிகளுக்கு நேரில் செல்ல நரேஷ் குப்தா தயங்கக் கூடாது என்று அவர்கள் கோருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications