வாயில் பபுள் கம் வெடித்து வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil

உக்ரைன் நாட்டில் இச் சம்பவம நடந்தது. கிவ் பல்கலைக்கழக வேதியியல் மாணவரான விளாடிமீர் லிகோனோஸ் (25), தனது கல்வி நிலைய ஆய்வுக் கூடத்தில் உள்ள சிட்ரிக் ஆசிடை பபுள் கம்மில் தடவிவிட்டு வாயில் போட்டு மெல்லுவது வழக்கம்.
புளிப்பு சுவைக்காக அவர் அப்படிச் செய்வாராம். ஆனால், நேற்று சிட்ரிக் ஆசிட் என நினைத்து இன்னொரு ரசாயனத்தை பபுள் கம்மில் தடவியுள்ளார். அது வெடிமருந்தாகும்.
அதை அறியாமல் வழக்கம்போல் அவர் வாயில் போட்டு மென்று முட்டை விட்டபோது பயங்கர சத்தத்துடன் அது வெடித்துச் சிதறியதில் விளாமீரின் முகமே சிதறிவிட்டது. இதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார்.
சிட்ரிக் ஆசிட் பாட்டிலிலே யாராவது வெடிமருந்தை கலந்து வைத்தார்களா என்ற கோணத்தி்ல் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications