என்.கே.கே.பி.ராஜா ஜாமீன் நிபந்தனை தளர்வு
ஈரோடு: என்.கே.கே.பி.ராஜா மற்றும் அவரது 2வது மனைவிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனில் நிபந்தனையை தளர்த்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆள்கடத்தல் வழக்கின் முக்கிய சாட்சியான சிவபாலன் தாக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் தி.மு.க மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவான அவருக்கும், அவரது இரண்டாவது மனைவி உமாமகேஸ்வரிக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருவரும் முன்ஜாமீன் பெற்று, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
இந்த நிலையில் தன் மீதான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி, ராஜா ஈரோடு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த ஈரோடு முதல் கூடுதல் அமர்வு நீதிபதி ஜெயராமன், என்.கே.கே.பி. ராஜாவும், அவரது இரண்டாவது மனைவி உமா மகேஸ்வரியும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று மட்டும் கோபிசெட்டிபாளையம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications