மக்களைத் தட்டி எழுப்பவே அதிமுகவுக்கு ஆதரவு - வரதராஜன்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது மக்கள் உணர்வை தட்டி எழுப்பும் முயற்சிதான் என மார்க்சிஸ்ட் கம்யூ மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி வந்த வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுக, காங் அரசுகள் பின்பற்றும் கொள்கைகள் அனைத்தும் பிற்போக்கானவை. இதனை முறியடிக்க வலுவான சக்தியாக அதி்முக மட்டுமே உள்ளது. அதனால் மா.கம்யூ அதனை ஆதரிக்கிறது.

திருசெந்துர் இடைத்தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளை அதி்முகவுக்கு செலுத்த வேண்டுமேன எங்கள் சொந்த மேடையில் இருந்து குரல் கொடுப்போம்.

விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளிக்கின்றனர். மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துகிறது. அத்திவாசிய பொருட்கள் பதுக்கல் அதிகரித்து விலைவாசி உயர்த்தப்படுகிறது. இதுகுறித்து எங்களது எதிர்பபை மறியலில் காட்டினோம்.

ஒரு லட்சம் பேர் எங்கள் போராட்ட களத்தில் உள்ளனர். இது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பு. இந்த எதிர்ப்பு திருச்செந்தூர் தொகுதி இடை தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும்.

மீனவர்கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதில அரசுகள் மவுனம் சாதித்து வருவது மீனவர்கள் மத்தியில் கொநதளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பிக் ஆலையை திறக்க திமுக முயற்சி செய்யவில்லை. அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது மக்களின் உணர்வை தட்டி எழுப்பும் முயற்சிதான் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+