தேர்தல்-டாஸ்மக் கடைகள் 4 நாட்கள் மூடல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருசெந்தூர், வந்தசாசி தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு இந்த இரு தொகுதிகளிலும் டாஸ்மக் மதுபானக் கடைகள் 4 நாட்கள் மூடப்படுகின்றன.

இந்த தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்குபதிவு 19ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடக்கிறது. தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் அமைதியாக நடக்க தொகுதிகளில் உள்ள டாஸ்மக் கடைகளை மூடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

அதி்ல், 17ம் தேதி மாலை 5 மணியில் இருந்து 19ம் தேதி இரவு 10 மணி வரையிலும், வாக்கு எண்ணி்க்கை நடக்கும் 23ம் தேதி முழுவதும் இரு தொகுதிகள் மற்றும் அருகாமைப் பகுதிகளில் உள்ள டாஸ்மக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து 4 நாட்களுக்கு டாஸ்மக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போதை இன்ஸ்பெக்டர்- டிஎஸ்பி எச்சரிக்கை:

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் மேல் பகுதியிலுள்ள மாஞ்சோலை குதிரைவெட்டி எஸ்டேடில் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது.

நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சில வழக்கறிஞர்கள் அந்த விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். இரவு அவர்கள் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறவே இன்ஸ்பெக்டர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவே அவர்கள் அம்பை டிஎஸ்பிக்கு தெரிவித்தனர். டிஎஸ்பி கோபால் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் போதை தெளித்த இன்ஸ்பெக்டர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவே டிஎஸ்பி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+