தெலுங்கானா எதிர்ப்பு கலவரம்-எச்எஸ்பிசி வங்கி மீது தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆந்திராவில் தெலுங்கானா மாநிலத்தை எதிர்த்து நடைபெறும் வன்முறையில் எச்எஸ்பிசி வங்கி தாக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதை எதிர்த்து ஆந்திராவில் கிளர்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் காரணமாக பிரபல நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் தனது ஆந்திர யூனிட்டை தற்காலிகமாக மூடிவிட்டது.

ஆந்திர மாநிலம் தௌலேஸ்வரத்தில் உள்ளது இந்த யூனிட். தெலுங்கானா மாநில உருவாக்கத்துக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளதால். ஊழியர்கள் நலன் கருதி இந்த தொழிற்சாலையை மூடியுள்ளது, ஸ்மித்கிளைன்.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கியை கலவரக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல்களைக் கண்டு பயந்துள்ள முதலீட்டாளர்கள், தற்காலிகமாக ஆந்திராவைக் காலி செய்யத் துவங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+