இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட 2 இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்ட 2 இந்தியக் கடலோரக் காவல் படை வீரர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த இலங்கை மீனவர்களின் 7 படகுகளை தடுத்து நிறுத்திய இந்திய கடலோரக் காவல் படையினர் அவர்களை இந்திய கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றனர்.

ஆனால், திடீரென இந்திய கடலோரக் காவல் படையினரை தாக்கிய இலங்கை மீனவர்கள் இரு வீரர்களை இழுத்து தங்கள் படகில் போட்டுக் கொண்டு படகுகளை இலங்கைக்குத் திருப்பினர்.

தகவல் அறி்ந்த கடலோரக் காவல் படை இந்திய கடற்படைக்கு தகவல் தந்தது. இதையடுத்து இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையின் உதவியோடு அந்தப் படகுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டது.

அப்போது கடலோரக் காவல் படையினருடன் இருந்த ஒரு மீனவப் படகு சென்னைக்குக் கிழக்கே 200 கி.மீ. தூரத்தில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைடுத்து இந்திய கடற்படையினர் அங்கு விரைந்து இரு கடலோரக் காவல் படை வீரர்களை மீட்டனர். அவரைப் பிடிதது வைத்திருந்த இலங்கை மீனவர்களையும் கைது செய்தனர்.

இதையடுத்து மேலும் 6 படகுகளையும் அதிலிருந்த 35 இலங்கை மீனவர்களையும் பிடித்த கடற்படை அவர்களை விசாகப்பட்டிணத்துக்கு அழைத்து வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+