For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரனுக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம்?

By Staff
Google Oneindia Tamil News

Dinakaran
டெல்லி: கர்​நா​டக உயர் நீதி​மன்ற தலைமை நீதி​பதி தின​க​ர​னை பதவி நீக்கம் செய்யும் வகையில் அவர் மீது கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு​வ​ரக் கோரி 66 ராஜ்யசபா எம்பிக்கள் கையெ​ழுத்​திட்​டுள்​ள​னர்.

பா​ஜக,​​ ​இட​து​சாரிக் கட்​சி​கள், சமா​ஜ​வாடி ஆகிய கட்சிகளை உள்​ளிட்ட உறுப்​பி​னர்​கள் இதில் கையெ​ழுத்​திட்​டுள்​ள​னர்.​ ஆனால், காங்​கி​ரஸ் உறுப்​பி​னர்​கள் யாரும் இதில் கையெ​ழுத்​தி​ட​வில்லை.​

நீ​தி​பதி தின​க​ரன் உள்​ளிட்ட 5 நீதி​ப​தி​கள் உச்ச நீதி​மன்றநீதி​ப​தி​க​ளாக நிய​மிப்​ப​தற்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது.​இந்​நி​லை​யில் நீதி​பதி தின​க​ரன் மீது நில ஆக்​கி​ர​மிப்புதொடர்​பாக புகார் கூறப்​பட்​ட​தைத் தொடர்ந்து அவ​ரது பதவி உயர்வு தொடர்​பான பரிந்​துரை நிறுத்​தி​வைக்​கப்​பட்​டுள்ளது.

இந்​நி​லை​யில் அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ராஜ்யசபாவைச் சேர்ந்த 66 எம்பிக்கள் கையெ​ழுத்​திட்டு அவைத் தலை​வ​ரி​டம் மனு அளித்​துள்​ள​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​

ராஜ்யசபா விதிகளின்​படி கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு ​வர குறைந்​தது 50 உறுப்​பி​னர்​கள் கையெ​ழுத்​திட்டாலே போதுமானது.

எனவே அடுத்த வாரத்தில் தினகரன் மீது கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு​வ​ரப்​பட்டு நிறை​வேற்​றப்​ப​டும் என்று தெரிகிறது. இதனால் தினகரன் பதவி விலகும் நிலை ஏற்படும்.

இந் ​நி​லை​யில் மத்​திய சட்ட அமைச்​சர் வீரப்ப மொய்லி கூறுகையி்ல்,​ ஒரு நீதி​ப​திக்கு எதி​ரான புகார் குறித்து உச்சநீதி​மன்ற தலைமை நீதி​ப​தியே விசா​ரணை செய்து நட​வ​டிக்கை எடுக்கலாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X