தெலுங்கானா தவிர வேறு புதிய மாநிலங்கள் அமைக்கப்பட மாட்டாது - பிரணாப்

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து பல மாநிலங்களிலும் எங்களுக்கும் தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கைகள் குவியத் தொடங்கியுள்ளன.
தமிழகத்திலிருந்து உ.பி. வரை ஏகப்பட்ட மாநிலங்களில் புதிய மாநிலக் கோரி்க்கைகள் கேட்க ஆரம்பித்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தை மேலும் 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தென்மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக்கினால் வளர்ச்சி ஏற்படும் என்று பா.ம.க தலைவர் ராமதாஸ் குரல் எழுப்பினார்.
மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தனி மாநில கோஷங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'தனி தெலுங்கானா மாநில கோரிக்கை 60 ஆண்டு காலமாக உள்ளது. எனவே தான் மத்திய உள்துறை அமைச்சர் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதை காரணம் காட்டி மற்ற மாநிலங்களிலும் பிரிவினை கேட்பது சரியாக இருக்காது. இதற்குபிறகு மேலும் புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. இதற்கு அனுமதிக்கவும் முடியாது என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.












Click it and Unblock the Notifications