அப்சல் குருவை உடனடியாக தூக்கில் போடு்ங்கள்: எம்.எஸ்.பிட்டா
டெல்லி: அப்சல் மற்றும் அஜ்மல் கசாபை தூக்கில் போடாத வரை தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டுதானிருக்கும். எனவே அப்சலை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று தீவிரவாத தடுப்பு முன்னணி தலைவர் எம்.எஸ்.பிட்டா கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்த எட்டாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் தீவிரவாத தடுப்பு முன்னணி அமைப்பின் தலைவர் எம்.எஸ்.பிட்டா கூறுகையில்,
அப்சல் மற்றும் பாகிஸ்தானின் அஜ்மல் கசாப் ஆகியோர் எப்போது தூக்கில் போடப்படுகிறார்களோ அப்போது தான் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பது நிற்கும். அதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். எனவே, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்த இரண்டுபேரையும் உடனடியாக தூக்கில் போடவேண்டும்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் 11 எம்.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கின்றனர். இது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications