குத்துவிளக்கேற்ற மறுத்த அமைச்சர் அகமது - ஜேசுதாஸ் கண்டனம்- வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த இந்திய - ஜப்பான் வர்த்தக தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கின்போது குத்துவிளக்கேற்ற மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது மறுப்பு தெரிவித்ததால் அதற்குக் கண்டனம் தெரிவித்து பிரபல பாடகர் ஜேசுதாஸ் விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

நேற்று இந்திய - ஜப்பான் தொழில் கூட்டமைப்பு சார்பில் தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் அகமது, ஜேசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாக்களின் தொடக்கத்தில் குத்துவிளக்கேற்றுவது வழக்கமாகும். அதன்படி அகமதுவிடம் குத்துவிளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் அகமது மறுத்து விட்டார்.

முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குத்து விளக்கு ஏற்ற மாட்டார்கள். அவர் இஸ்லாமியர் என்பதால் குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டதும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜேசுதாஸ், அமைச்சருக்குக் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+