மும்பையில் லேசான நிலநடுக்கம்- பொதுமக்கள் பீதி
மும்பை: மும்பையில் நேற்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும் மேற்கு புறநகர் பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை 5.21 மணிக்கு மும்பை புறநகர் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளியாக பதிவாகியிருந்தது.
கொய்னா அணைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சங்லி, ஒஸ்மனாபாத், ரத்னகிரி, சதாரா மாவட்டங்களில் உணரப்பட்டது.
அப்போது, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மேஜை, நாற்காலிகள் ஆட்டம் கண்டதாகவும், பொருட்கள் கீழே விழுந்ததாகவும் கூறி பல இடங்களில் மக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதவிர நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
கடந்த மாதம் 14ம் தேதி புனேயிலிருந்து 150 கி.மீ தொலைவில் சதாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா அணையை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
ஒரு மாத காலத்தில் இரண்டாவது முறையாக நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications