பிரமோத் மகாஜனைக் கொன்ற தம்பி பிரவீன் மகாஜன் கவலைக்கிடம்- கோமாவில் சென்றார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாஜக இளம் தலைவர் பிரமோத் மகாஜனை சுட்டுக் கொன்ற அவரது தம்பி பிரவீன் மகாஜன் கோமா நிலைக்குப் போயுள்ளார். அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிரமோத் மகாஜனை அவரது வீட்டில் வைத்து பிரவீன் மகாஜன் சுட்டுக் கொலை செய்தார். இந்தக் கொலை வழக்கில் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை கோர்ட் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

2 வாரங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் போனதால் அவருக்கு கோர்ட் பரோல் அளித்தது. இதையடுத்து நாசிக் சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார் பிரவீன் மகாஜன்.

இந்த பரோல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் திடீரென பிரவீனுக்கு மூளையி்ல் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. கோமாவில் போய் விட்டார் பிரவீன் மகாஜன்.

இதையடுத்து தானேவில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சகோதரர் பிரகாஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+