கொள்ளை கும்பல் தாக்கி வீட்டுக்குள் 3 நாள் மயங்கி கிடந்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை தாக்கிவிட்டு மர்ம ஆசாமிகள் 20 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தாக்கப்பட்ட பெண் வீட்டுக்குள்ளேயே 3 நாட்களாக மயங்கிக் கிடந்து தெரியவந்துள்ளது.

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வசந்தாவின் மகள் தரணி (21). இவர் ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வசந்தா சென்றுவிட்டார்.

தரணி மட்டும் வீட்டில் தனியாக தங்கியிருந்து வேலைக்குச் சென்றுவந்தார். புதன்கிழமை வரை அவர் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்கள் அவர் வேலைக்கு வரவில்லை.

இதற்கிடையே, கடந்த புதன்கிழமை இரவிலிருந்து தரணியின் அக்கா பிரியா அவரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால் தரணி செல்போனை எடுக்கவில்லை.

முதல் நாள் தொடர்பு கொள்ள முடியாததால் இரண்டு நாட்கள் கழித்து மீண்டு செல்போனில் அழைத்தார். அப்போதும் தொடர்ந்து கொள்ள முடியவில்லை. இதனால் பிரியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனினும், பிரியா தனது கணவர் ஈஸ்வரனுடன் தரணியின் வீட்டுக்கு நேற்று மாலை தான் வந்து பார்த்தார். கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது தரணி தலையில் ரத்த காயத்துடன் மயங்கி க்கிடந்தார்.

அதிர்ந்துபோன பிரியா, உடனடியாக தரணியை மாம்பலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். போலீசுலும் புகார் செய்யப்பட்டது.

மருத்துவமனையில் லேசாக மயக்கம் தெளிந்த தரணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், புதன்கிழமை இரவு 2 பேர் வீட்டுக்கு வந்து தன்னை தலையில் அடித்துப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர் என்று கூறினார்.

வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.45,000 மற்றும் 50 புடவைகள் ஆகியவை திருடு போயுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+