கைதான 5 அமெரிக்கர்கள்-நாடு கடத்த பாக். கோர்ட் தடை
லாகூர்: தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஐந்து இளம் அமெரிக்கர்களை நாடு கடத்த பாகிஸ்தான் கோர்ட் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா என்ற நகரில் வைத்து இந்த ஐந்து இளம் அமெரிக்க முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் ஆப்கானிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு முன்னர் வசிரிஸ்தான் சென்று அங்குள்ள தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் இவர்களை போலீஸார் கைது செய்தனர். இதுவரை இவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் எந்தக் கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்படவில்லை.
மேலும் இவர்களை நாடு கடத்தும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில், லாகூர் உயர்நீதிமன்றம் இவர்களை நாடு கடத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்துள்ளதாம்.
இதுகுறித்து லாகூர் உயர்நீதிமன்ற பதிவாளர் தாஹிர் பர்வேஸ் கூறுகையில், இவர்கள் குறித்த விவரங்களை அறிய நீதிமன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது. இவர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே அதுவரை இவர்களை நாடு கடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பின்னர் இந்த உத்தரவை லாகூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications