ஆசிரியைக்கு செக்ஸ் தொல்லை - கல்வி அதிகாரி மீது வழக்கு
நெல்லை: கங்கைகொண்டான் துவக்கப்பள்ளி ஆசிரியைக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது நெல்லை சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கங்கைகொண்டான் ஊராட்சி ஓன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அலுவலக பணி தொடர்பாக உதவி தொடக்க கல்வி அலுவலரை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது அந்த அலுவலர் உமா மகேஸ்வரியிடம் செக்ஸ் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து உமா மகேஸ்வரி, நெல்லை சந்திப்பு போலீசார் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்யாததால் நெல்லை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரி்த்த நீதிபதி அதன் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே உமா மகேஸ்வரி தன்னை மிரட்டியதாக கல்வி அதிகாரி கொடுத்த புகார் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications