'பிரேக்-டவுன்' பஸ் மீது லாரி மோதி 4 பேர் பலி
வாணியம்பாடி: பிரேக்-டவுன் ஆகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது லாரி மோதியதால் அருகே அமர்ந்திருந்த பயணிகள் உட்பட 4 பேர் பலியானார்கள்.
சென்னையில் இருந்து சேலத்துக்கு சென்றுகொண்டிருந்த அரசு பஸ் இன்று அதிகாலை 4 மணிக்கு வாணியம்பாடி பை-பாஸ் சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது லேசாக மோதியது.
இதனால் பேருந்து என்ஜினில் பழுது ஏற்பட்டு சாலையோரமாக நிறுத்திவைக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது வேலூரில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற லாரி வேகமாக வந்து நின்றுகொண்டிருந்த பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ், சாலையோரத்தில் அமர்ந்திருந்த பயணிகள் மீது ஏறி நசுக்கியது.
இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் சாரதி, பயணிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். லாரியை ஓட்டி வந்த டிரைவரும் உடல் நசுங்கி பலியானார்.
பயணிகள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications