ஊட்டியில் படகு கவிழ்ந்து இருவர் பலி?
ஊட்டி: எமரால்டு அணையில் படகு கவிழ்ந்து இரண்டு பேர் நீரில் மூழ்கினர். மூன்று மணி நேரமாக அவர்களை தேடியும் கிடைக்காததால், அவர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஊட்டி அருகே போர்த்தி பகுதியில் இருந்து கேரட் மற்றும் உருளைக் கிழங்குகளை ஏற்றிக்கொண்டு மறுகரையை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்று திடீரென நீரில் கவிழ்ந்தது.
படகில் இருந்த இரண்டு பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். இதை பார்த்தவுடன் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து படகி்ல் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மூன்று மணிநேரத்துக்கும் மேலாக தேடியும் இரண்டு பேரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. மழை காரணமாக அணையில் நீர் நிரம்புயுள்ளதால் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனினும் கூடுதல் படகுகள் மற்றும் டைவர்கள் மூலம் அவர்களை தேடும் பணியில் தீயணைப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications