தமிழகத்தில் மெளன புரட்சி நடக்கிறது-வைகோ
வந்தவாசி: தமிழகத்தில் மெளன புரட்சி நடக்கிறது, இடைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
வந்தவாசி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,
மக்களே, ஜனநாயத்தை காப்பாற்றுங்கள். இது ஜனநாயத்திற்கும் பணநாயகத்திற்கு நடக்கும் தேர்தல். இந்தத் தேர்தலில் ஆயிரம் ஆயிரமாக கொடுக்கிறார்களே, இது செடியில் மூளைத்த பணமா? உண்டியல் வைத்து வசூல் செய்த தேர்தல் பணமா?.
ஊழல் பணத்தை கொண்டு மக்களை விலைக்கு வாங்க நினைக்கிறார்கள். அதை நீங்கள் உணர்ந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அராஜகம், அக்கிரமம், அதிகார துஷ்பிரயோகம் தலைவரித்து ஆடுகிறது. மாட்டுக்கு முக்கானங்கயிறு, குதிரைக்கு கடிவாளம், யானைக்கு அங்குசம் என்பதை போல திமுகவின் அக்கரமங்களை தடுக்க, வண்டிக்கு பிரேக் போடுவது போல, மக்கள் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்.
அதிமுக மீது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது தெரிகிறது. அரசின் மீது மிகுந்த கோபம் தெரிகிறது. தமிழகத்தில் மெளன புரட்சி நடக்கிறது, அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications